கண்ணப்பர் தீடல் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்

சென்னை: சென்னை சுளை ரவுண்ட்டானாவில் உள்ள கண்ணப்பர் தீடல் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.  கண்ணப்பர் தீடல் என்ற பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிறிய பேட்டி வீடுகள் போன்று சிறு வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

இந்த இடம் சாலை ஓரம் வசித்த வீடற்ற மக்கள் என்பதால் அவர்கள் அங்கு இருந்து அப்புறவுப்படுத்தப்பட்டனர். கடந்த 1997ம் ஆண்டு அப்புரவுபடுத்தப்பட்ட இந்த மக்கள் அதன் பிறகு அளிக்குளம் மோர்மார்க்கெட்டில் உள்ள அள்ளிக்குளம் என்ற இடத்தில் அவர்கள் இடம் மற்றம் செய்யப்பட்டு கடந்த 2002ம் ஆண்டு முதல் இங்கு வசித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத வகையில் மிகவும் நெருக்கமான குறுகலான குடியிருப்புகளில் சிறிய சிறிய தடுப்புகளை ஏற்படுத்தி வசித்து வரும் நிலையில் இவர்கள் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர்களால் தூங்க முடியவில்லை, முறையாக ஓய்வு எடக்கமுடியவில்லை மற்றும் சாப்பிடுவதற்கு சமைக்கமுடியவில்லை போன்ற பல்வேறு பிரச்சனைகளை தெரிவிக்கின்றார்கள்.

தற்போது இவர்கள் தெரிவிப்பது என்னவென்றால் அரசு அதிகாரிகள் இந்த இடத்தை குறுகிய காலத்திற்குள் மாற்று இடம், மாற்று வீடு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்ததாகவும், ஆனால் இது வரை பல ஆண்டுகள் கடந்தும் எந்தவித ஏற்பாடுகளும் செய்துத்தரவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

Related Stories: