×

பிபிசி ஆவணப் படம் கருத்து கூறிய விவகாரம்: ஏகே அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து விலகல்

புதுடெல்லி: பிபிசி-யின் ஆவணப்படும் குறித்து கருத்து தெரிவித்த ஏகே அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏகே அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, மாநில காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டி ருந்தார்.

அதற்காக அவருக்கு காங்கிரஸ் மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் விலகுவதாக அறிவித்துள்ளார். அதில், ‘பேச்சுரிமை க்காக போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது டுவிட்டை நீக்கும்படி கூறி, சகித்து கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அதற்கு நான் மறுத்து விட்டேன். கடந்த 24 மணி நேரத்தில் காங்கிரசை சேர்ந்த பலரும் எனது மனதை காயப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படமானது, இந்திய அமைப்புகளின் மீதுள்ள பிபிசி-யின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்ற செய்து விடும்’ எனக்கூறி தனது ராஜினாமா கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

2வது ஆவணப்படம் ரிலீஸ்
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை இன்று பிபிசி வெளியிட்டுள்ளது. ‘மோடி கேள்வி’ பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை இணைத்துள்ளார்.

Tags : BBC ,AK Anthony ,Congress , BBC Documentary Commentary: AK Anthony's son quits Congress
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...