சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சேலம்: சேலம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2012ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிங்களாந்தபுரம் பக்கமுள்ள செல்லப்பம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டார்.

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜெயந்தி விசாரித்து, ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ₹7ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: