படூர் பெரியகுளம் தூர்வாரும் பணி எம்பி, எம்எல்ஏ ஆய்வு

திருப்போரூர்: படூர் பெரியகுளம் தூர்வாரும் பணியை எம்பி, எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர். திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளம் நீண்டகாலமாக முறையாக பராமரிக்காததால் போதிய தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, படூர் ஊராட்சி மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில், குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள், கேளம்பாக்கம் செட்டிநாடு அகாடமி, படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சார்பில், குளத்தை தூர்வாரும் பணி நேற்று துவங்கியது.

படூர் ஊராட்சி தலைவர் தாரா சுதாகர் தலைமை தாங்கினார். மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை தலைவர் சுதாகர் வரவேற்றார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோர் கலந்துகொண்டு பெரிய குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதி நம்பி, செட்டிநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் மீனாட்சி, டீன் தர், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கோயேட்டி கிரி கோஸ்வாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: