ஜி 20 உச்சி மாநாட்டிற்கு எகிப்தை விருந்தினர் நாடாக அழைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி: எகிப்து அதிபர் அப்தெல் எல் சிசி

டெல்லி: 2015ல் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தேன், அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் தனது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்று எனக்குத் தெரியும். எங்களின் உறவை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடியை எகிப்தின் கெய்ரோவுக்கு அழைத்துள்ளேன். நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது பற்றி பேசினோம்

மேலும் COP 27 பற்றியும் விவாதித்தோம். எகிப்துக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம். வரவிருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு எகிப்தை விருந்தினர் நாடாக அழைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் கூறியுள்ளார்.

நாளை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளேன். இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கலந்துரையாடலின் போது, ​​வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது பற்றி பேசினோம்.

பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியாவும் எகிப்தும் பழைய கலாச்சார நாகரிகங்கள். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று எகிப்திய அதிபர் அப்தெல் பத்தார் கூறியுள்ளார்.

Related Stories: