திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணை ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணையிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீதிமன்றம் சென்றபோது சேற்றில் வழுக்கி கீழே விழுந்து கை எலும்பு முறிந்ததாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுதாரரின் மனு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: