ஈரோடு மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை சாகுபடி குறைவு: குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரிக்கை

ஈரோடு: பனிபொழிவால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தியூர் சந்தையில் ஒரு வெற்றிலை ரூ.2.40 காசுகளுக்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெற்றிலை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறது. இந்த வெற்றிலைகள் அந்தியூர் வாரச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் வெற்றிலை சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.

 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை ரூ.200 முதல் ரூ.240 வரை விற்கப்படுகிறது. அதாவது ஒரு வெற்றிலையின் விலை ரூ.2.40 காசுகளாக உள்ளது. விலை அதிகரித்த போதிலும் விளைச்சல் குறைத்துள்ளதால் தங்களுக்கு போதுமான லாபம் கிடைக்கவில்லை என வேதனையுடன் கூறும் விவசாயிகள் 200 கட்டுகள் வெற்றிலை பறிக்கும் இடத்தில் வெறும் 100 கட்டுகளுக்கே வெற்றிலை கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது விலை அதிகரித்து காணப்பட்டாலும் அடுத்த ஓரிரு வாரங்களிலேயே ஒரு கட்டு ரூ.50 என்ற அளவில் இறங்கி விடும் என்றும் வெற்றிலைக்கென குறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: