சென்னையில் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு  இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து  வருவதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள் வள மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் வரும் குழந்தைகளில் 50 முதல் 60% குழந்தைகள் சளி, இருமலுடன் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வைரசால் ஏற்படுத்தும் சுவாச பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக சளி மற்றும் இருமல் பாதிப்பு டிசம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு பின்னர் குறைந்து விடும் என்றும் அனால், தற்போது அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவாரம் வரை சளி, இருமல் பாதிப்பு நீடிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை நுரையீரல் பாதிப்பின் முந்தைய கட்டம் என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மற்றும் குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதே நுரையீரல் தொற்றுக்கு காரணம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் மட்டுமன்றி அனைத்து வயதினரும் பருவநிலை மாற்றத்தால் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதில் காய்ச்சல், இருமலுடன் மூச்சு திணறல் பாதிப்புக்குள்ள 6 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றன.

பாதிப்பு அதிகமுள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பாதிப்பின் காரணமாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது மிகவும் குறைவாகவே இருந்தாலும் இருமல், சளியுடன் குழந்தைகளுக்கு தொண்டை வலி ஏற்படுவதை காணமுடிவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸால் மட்டுமன்றி வேறு பல வைரஸ் காரணமாகவும் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மருத்துவர்கள் இது கொரோனா தொற்று இல்லை என்று விளக்கமளித்துள்ளன. குழந்தைகளுக்கு 5 வயது முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஃபுளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.   

Related Stories: