×

தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக பதவி வகித்து வந்த பி.ஜி. மால்யா, ஐசிஎப் பொது மேலாளராக பதவியேற்பு

சென்னை: பி.ஜி. மால்யா நேற்று (ஜனவரி  24, 2023) ஐசிஎப்பின் பொது மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிஎப் பொது மேலாளராக பொறுப்பேற்கு முன் மால்யா தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக பதவி வகித்து வந்தார். 1985ம் ஆண்டு இந்திய ரயில்வே மின்பொறியாளர் சேவைப் பிரிவை (IRSEE) சேர்ந்த திரு மால்யா ஐஐடி, தில்லியில் மின்பொறியியல் பிறிவில் பட்டம் பெற்றவர்.

தனது 30 ஆண்டு கால ரயில்வே சேவையில் தெற்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, ஐசிஎப் மற்றும் பங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் உள்பட்ட பல்வேறு ரயில்வேக்களில் பணியாற்றி உள்ளார். அவ்வாறு பணியாற்றும் போது, குண்டக்கல் மற்றும் பிலாஸ்பூர் ரயில்வே கோட்டங்களில் கோட்ட மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

ரயில்வேயில் சிறந்த அனுபவம் உள்ள திரு மால்யா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்சு, தென்கொரியா, சீனா, இரான், மற்றும் சுவிட்சர்லாந்தில் ரயில்வே தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.

Tags : General ,Southern Railway ,P.G. Mallya ,ICF , Additional General Manager of Southern Railway, P.G. Mallya takes over as General Manager of ICF
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்