வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கம்

சத்தியமங்கலம்: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.  சத்தியமங்கலம் புலிகள் காப்பதாகத்திற்குட்பட்ட கடம்பூர்  மலை பகுதியில் உகினியம் என்ற கிராமத்தில் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியின் வளாகத்தில் இன்று காலை சரியாக 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் திடீரென அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற போது மோசமான வானிலை காரணமாக தரையிறங்கியது.

மேலும், கடுமையான பனிமூட்டம் காரணமாக பாதை  தெளிவாக தெரியாததால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  ஹெலிகாப்டர் உகினியம் கிராமத்தில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் சென்றனர். பிறகு 1 மணி நேரமாக  காத்திருந்த ரவிசங்கர் மற்றும் அவர் உதவியாளர்கள்  வானிலை சீரான பிறகு உகினியம் கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories: