×

கோவையில் குழந்தைகளுக்கு 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை படைத்த பெண்

கோவை: கோவையை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்பால் தானம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ரத்த தானம், கண் தானம் போன்று பிறந்த குழந்தை உயிரை காக்க தாய்ப்பால் தானம் மிகவும் முக்கியம். ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உடல் குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் மூலம் மறுவாழ்வு கிடைக்க வழிவகை செய்கிறார் கோவை வடவள்ளி சேர்ந்த ஸ்ரீதிவ்யா, 4வயது ஆண்குழந்தைக்கும் 10 மாதம் பெண் குழந்தைக்கும் தாயான அவர் தன்னிடம் மிதமிஞ்சி சுரக்கும் பாலை மற்றகுழந்தைகளுக்கு தனமாக வழங்கி வருகிறார்.

இதுவரை 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ள ஸ்ரீதிவ்யா தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாயக விளங்குகின்றார். தாய்ப்பால் தானம் செய்வதால் அழகு குறைந்து விடும் என்பது தவறான கருது என்றும் அட்சயப் பாத்திரம் போல எடுக்க எடுக்க  சுரக்கும் தாய்ப்பாலை யார்வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார்.

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனைக்கு உறுதுணையாக அவரது கணவர் பைரைவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளதாக ஸ்ரீதிவ்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார். தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் அதிக அளவு தாய்மார்கள் இதில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.    



Tags : Tema , Woman in Coimbatore set record by donating 106 liters of breast milk to children
× RELATED தமிழக கிராம பகுதிகளில் அதிகரித்து...