×

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து:கட்டட இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்பு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் நேற்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உணரப்பட்டநிலையில் அடுத்த சில நிமிடங்களில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் ஒரே அறையில் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தேவையான ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு  நில அதிர்வு தான் காரணம் என்று உறுதிபட கூறமுடியாது என உத்திரபிரதேச டிஜிபி சவுகான் தெரிவித்திருக்கிறார். உரிய விசாரணைக்கு பிறகே உண்மை காரணம் தெரியவரும் என்றும் இந்த இடத்தின் அருகே கட்டடம் கட்டும் பணியும் நடந்தாலும் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்த படாததால் இது கட்டட இடிபாட்டுக்கான காரணமாக இருக்காது என்று கூறியுள்ளார். 


Tags : Uttar Pradesh , Uttar Pradesh, apartment building, tragic accident, 14 people rescued
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...