வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத கைக்குழந்தை உயிரிழப்பு: மருத்துவர்கள் சிகிச்சையளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக உறவினர்கள் புகார்

திருவண்ணாமலை: வந்தவாசி அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் 6 மாத கைக்குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். வந்தவாசியை சேர்ந்த இப்ராகிம்  , சபீனா தம்பதியின் 6 மாத ஆண் குழந்தை முகமது அசுல்  சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது. இதனை பெற்றோர் எடுத்து கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் செல் போனில் மூழ்கியபடி அலட்சியமாக இருந்ததால் சிறுது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டான்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து 6 மணி நேரம் தர்ணா போராட்ட ம் நடத்தினர். இதனை தொடர்ந்து திடிரென்று சாலை  மறியலிலும் ஈடுப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஏழுமலை வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உறவினர்கள் சமாதானம் அடையவில்லை . இதனால், அரசு மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: