ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது: தனியரசு பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது என தனியரசு தெரிவித்திருக்கிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பழனிசாமியின் எதேச்சதிகார போக்கால் அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிடும். அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தல் தொடர்பாக பெரும் தடுமாற்றம் நிலவுகிறது என்று கூறினார்.

Related Stories: