×

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு: தலைமை நீதிபதி உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அண்மையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார். முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை 99 சதவீத மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவசியம். இதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, ஐ.ஐ.டி. டெல்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.


Tags : Supreme Court ,A.A. ,S.S. , Committee headed by retired Justice AS Oka to translate Supreme Court judgments into state languages: Chief Justice orders
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...