தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்கான டெண்டரை எதிர்த்த மேல்முறையீடு ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

சென்னை:  சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க அளித்த விண்ணப்பித்தை நிராகரித்ததை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபன் வேர்ல்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து ஃபன் வேர்ல்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், டெண்டரை எடுத்த சன் லைட் வேர்ல்டு சார்பில் வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ் ஆகியோர் வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: