அமெரிக்கா செல்வதற்கு விசா நேர்காணலுக்கு வந்த முதியவர் திடீர் மரணம்

சென்னை: தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி சுகுணா பிரசாத் (65). இவரது மனைவி கலவாலா கல்யாணி (59). இவர்களின் மகன் அமெரிக்காவில்  வசிக்கிறார். இதையடுத்து மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா செல்வதற்கு விசா கேட்டு விண்ணப்பித்தனர். இதன் நேர்காணலுக்காக, கணவன், மனைவி இருவரும் கடந்த 21ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னையில் விசா நேர்காணல் பணிகளை முடித்துவிட்டு, நேற்று விமானத்தில் ஐதராபாத் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். இதற்காக, துளசி சுகுணா பிரசாத்தும் கல்யாணியும் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர்.   சென்னை உள்நாட்டு விமான நிலையம், பயணிகள் புறப்பாடு, கேட் எண் 14 அருகே, போர்டிங் பாஸ் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது துளசி சுகுணா பிரசாத் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே மனைவி பதற்றத்துடன் துடித்தார். இதையடுத்து துளசி சுகுணா பிரசாத்தை, சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி துளசி சுகுணா பிரசாத்  பரிதாபமாக இறந்தார்.

Related Stories: