திருப்பதியில் ஊழியர் தூங்கியபோது லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் அபேஸ்

திருமலை: திருப்பதியில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆசாமி ரூ.2 லட்சம் பணத்தை திருடிச்சென்று விட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும் கவுண்டர்கள் கோயிலின் மேற்கு மாட வீதியை ஒட்டி  உள்ளது. இங்கு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 36-வது எண் கவுண்டரில் இருந்த ஊழியர் பணியை முடித்துக் கொண்டு லட்டு விற்பனை செய்யப்பட்ட பணத்துடன் கவுண்டரிலேயே  தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி கவுண்டரில் இருந்த ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். தூக்கம் விழித்து பார்த்த ஊழியர் கவுண்டரில் பணம் இல்லாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில்  விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர்.

Related Stories: