×

சீனா படைகளை குவிக்கும் நிலையில் இந்திய கடற்படை மாபெரும் போர் ஒத்திகை

புதுடெல்லி:  இந்திய கடற்படையின் போருக்கான தயார்நிலை குறித்த `ட்ராபெக்ஸ்’ எனப்படும் போர் ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போர் ஒத்திகை இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியது. இதன்போது, ஏவுகணை போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், சிறிய போர் கப்பல்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகை போர் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், இந்த போர் ஒத்திகையானது, போருக்கான இந்திய கடற்படையின் தயார் நிலை மற்றும் தளவாடங்களின் செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது, என்று கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்தார். இதன் மூலம், எல்லையில் சீனா படைகளை குவித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ராணுவம், விமானப்படை மற்றும் கடலோர காவல்படைகளை ஒருங்கிணைக்கும் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என்று அவர் கூறினார்.


Tags : Indian Navy ,China , Indian Navy conducts massive war drills as China builds forces
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...