×

தமிழ்நாடு சிறுபான்மையினர் கடன் வாங்க விண்ணப்பிக்கலாம்: அமிர்த ஜோதி தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு: டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டம் 1-ன் கீழ்  பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000மும் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீமும் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகப்பட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மையின மாணவ,மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மாணவியர்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் மனுக்களுடன்,  சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


Tags : Tamil ,Nadu ,Amrita Jyoti , Tamil Nadu Minorities Can Apply For Loan: Amrita Jyoti Information
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...