பள்ளிகள் ஆன்லைன் மூலம் அங்கீகாரம் பெறலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள். ஆன்லைன் மூலம் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வசதியாக புதிய இணைய தளத்தை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் உருவாக்கியுள்ளது. அதேபோல அங்கீகாரங்களை புதுப்பிப்பதும் ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல தனியார் பள்ளிகள் மேற்கண்ட இணைய தளம் மூலம் தங்களின் அங்கீகாரங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அங்கீகாரம் புதுப்பிக்காமல் உள்ள பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும்  மாணவ மாணவியர்  பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் இருந்து வந்தது. அவர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படாது என்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிப்போர் வேறு பள்ளிகள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: