திக் விஜய் சிங்குக்கு பதிலடி வீடியோ வெளியிட்ட சட்ட அமைச்சர்

புதுடெல்லி: ஜம்முவில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பாலகோட் தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளியிடவில்லை, பொய்களை மட்டுமே வைத்து பாஜ ஆட்சி செய்கிறது என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னாள் விமான படை அதிகாரி ரகுநாத் நம்பியாரின் வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் விமானப்படை மார்ஷல் ரகுநாத் நம்பியார், ‘‘பாலகோட் தாக்குதல் அமோக வெற்றி பெற்றது. தாக்குதலை நடத்திய அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் அடைந்தனர்” என தெரிவித்துள்ளார். இதனை பதிவிட்டுள்ள அமைச்சர் காங்கிரஸ் மற்றும் இந்திய ஆயுத படை குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இது தான் பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: