தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு

சென்னை: தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் உள்ளார். இவர் முதல்வரான பிறகு, அந்த மாநிலத்தில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ள விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக செல்லவும், புதிய தலைமை செயலகம் கட்டிடம் திறப்பு விழாவில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: