ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு..!

பெங்களூரு: ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மறைந்துவிட்டார். மற்ற மூவரும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்த பின்னர் 3 பேரும் விடுதலையாகி வெளியே வந்தனர்.இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் ஆகிய பொருட்களும் அடங்கும். இவை கடந்த 2011-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களில் புடவைகள், காலனி, சால்வைகள் ஆகியவற்றை ஏலம் விடும் கோரி வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டத்தை அடுத்து நரசிம்மமூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி ராமச்சந்திர டி.ஹுத்தார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சரியானது என நீதிபதி தீர்ப்பளித்தார். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.விடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: