×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்துடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை சந்தித்து பேசி வருகிறார்.கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஈரோடு கிழக்கு தேர்தல் இருவரும் தங்கள் சார்பில் வேட்பாரை களமிறக்க ஆர்வம் காட்டிவரும் சூழலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இளங்கோவன் தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் தேசிய கட்சி போட்டியிட்ட அடிப்படையில் இரண்டு அணியினரும் சேர்ந்து பாஜக சந்தித்து நீங்கள் தனியாக போட்டியிட்டால் நாங்களும் போட்டியிட தயார் தான் என்று கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில்  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு ஓ. பன்னீர்செல்வம் சண்முகத்துடன் சந்தித்துள்ளார். பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர். பாஜக முடிவுக்கே கட்டுப்படுவேன் என ஏ.சி. சண்முகம் நேற்று அறிவித்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு கேட்டு சந்தித்துள்ளார். பழனிசாமி தரப்புக்கு ஆதரவு இல்லை என ஏ.சி. சண்முகம் நிராகரித்துவிட்ட நிலையில் ஓ. பன்னீர்செலவம் தரப்பினர் சந்தித்துள்ளனர்.    



Tags : East ,Justice Party ,Shanmukha ,Panneerselvam , Erode East By-Election: New Justice Party Leader With Shanmukha O. Panneerselvam Junction
× RELATED குளத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டுகோள்