திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை கவுன்டரில் ரூ.2 லட்சம் பணம் திருட்டு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை கவுன்டரில் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. 36வது எண் கவுன்டரில் லட்டு விற்ற பணத்துடன் ஊழியர் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர் பணத்தை திருடிச் சென்றுள்ளார். புகாரின் பேரில் திருமலை காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: