வனத்தில் மலையேற்றம் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மாயம்: 11 நாட்கள் ஆகியும் திரும்பாததால் கவலை

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள சான் கேப்ரியல் வனப்பகுதியில் மலையேற்றம் சென்ற நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ், 11 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (65), கடந்த 13ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள சான் கேப்ரியல் வனப்பகுதியில் சிலருடன் மலையேறினார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. வனப்பகுதிக்குள் எங்கு சென்றார்கள் என்பதும் தெரியவில்லை. நீண்ட நாட்களாகியும்  ஜூலியன் சாண்ட்ஸ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனம்.

இதுதொடர்பாக கலிபோர்னியா போலீசில் புகார் அளித்தனர். அதிகாரிகளின் “வீரமான” முயற்சிகளைப் பாராட்டினர், அவர்கள் அறை வித் எ வியூ நடிகரைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்நிலையில் ஜூலியன் சாண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது அன்புக்குரிய ஜூலியனை தேடிவரும் சான் பெர்னார்டினோ போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வனப்பகுதியின் கடினமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், ஜூலியனை தேடிவரும் உங்களை பாராட்டுகிறோம். அவரை நலமுடன் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: