புதுச்சேரியில் பெண்களுக்கு பிரத்யேக பிங்க் பேருந்து சேவை விரைவில் துவக்கம்: அமைச்சர் பேட்டி

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் 3 பேருக்கு இலவச திருமண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் 21 வயதில் இருந்து 55 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்குகீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கும் ஒரே முதல்வர் ரங்கசாமி தான்.

மேலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு புதுவை அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் விரைவாக ஓட்டுனர் உரிமம் எடுக்க சிறப்பு வசதி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கென்று பிரத்யேக பிங்க் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: