தெலுங்கானா மாநில தலைமை செயலக திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா: தெலுங்கானா மாநில தலைமை செயலக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில தலைமை செயலகம் பிப்.17-ல் திறக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் மும்பை சாலையில் உள்ள எரகடா அரசு நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் இந்த புதிய அரசு தலைமை செயலகம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ. 150 கோடி நிதியை ஒதுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எரகடாவில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனையை விகாராபாத்திற்கு மாற்றவிருப்பதாக கடந்த வாரம் முதல்வர் அறிவித்திருந்தார்.

இப்போது அந்த இடத்திற்கு அரசு தலைமை செயலகம் மாற்றப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திராவிலிருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்திற்கு ஐதராபாத் தலைநகரமாக உள்ளது. இங்கு பிரம்மாணடமான புதிய தலைமை செயலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் இறுதி கட்டம் முடிந்துள்ளது. தெலுங்கானா மாநில தலைமை செயலகம் பிப்.17-ல் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: