மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்ரவரி.4ல் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜன.24ல் நடக்கிறது. பிப்.4 வரை நடக்கும் இத்திருவிழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை மாலை சித்திரை வீதிகளில் வீதி உலா வருவர்.

தைப்பூசத்தன்று பிப் 4-ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று காலை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி இருமுறை குளத்தை சுற்றி வருவர். அன்றிரவு 8:00 மணிக்கு ஒருமுறை சுற்றி வருவர். அன்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். ஆயிரங்கால் மண்டபத்தை மட்டும் பார்க்க வடக்கு கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் இன்று  நடைபெற்றது. சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அதற்காக ஒவ்வொரு வருடமும் வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படும்.

Related Stories: