தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள்-கல்லூரி மாணவர்கள் வரைந்தனர்

காரைக்கால் : காரைக்காலில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான முகமது மன்சூர் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை சார்பில் காரைக்காலில் உள்ள அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

இதில் காரைக்காலில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கற்பனைக்கு ஏற்ப அரசு பள்ளி வாயில் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். துணை ஆட்சியரும் தேர்தல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தேர்தல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Related Stories: