பொத்தகாலன்விளை ஆலய திருவிழாவில் திருக்கல்யாண மாதா தேரோட்டம்-உப்பு, மிளகு காணிக்கை செலுத்திய மக்கள்

சாத்தான்குளம் : பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலய திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. மக்கள் திரளானோர் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் உள்ள பிரசித்திப் பெற்ற புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று வரை நடந்த திருவிழாவில் தினமும் ஜெபமாலை, அருளுரை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடந்தது. 9ம் நாளான நேற்று முன்தினம் காலை அருட்பணியாளர்கள் சகாயம், ரோஜர் தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. மாலையில் ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, அருளுரை, நற்கருணை ஆசீரும், தொடர்ந்து 110ம் ஆண்டு தேர் பவனியும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு  திருவிழா மாலை ஆராதனை நடந்தது.

நேற்று நெய்யாற்றங்கரை அருட்தந்தை பால் தலைமையில் மலையாள திருப்பலி, அருட்தந்தை அருள்செல்வன் தலைமையில் திருத்தல பெருவிழா திருப்பலி நடந்தது.ஆயர் ஸ்டீபன், மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் ஆகியோர் பங்குபெற்ற ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.காலை 10 மணிக்கு நடந்த திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு முதல் நன்மை வழங்குதல் நடந்தது. நாங்குனேரி டென்சிங் ராஜா திருமுழுக்கு வழங்கினார்.

மதியம் செய்துங்கநல்லூர் ஜாக்சன் அருள் தலைமையில் தமிழ் திருப்பலி, மாலையில் தைலாபுரம் இருதயராஜா அருளுரை, பொத்தகாலன்விளை திருத்தல அதிபர் வெனிசுகுமார் அருளுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.மாலை 5.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 11 மணிக்கு நற்கருணை ஆசீர் நடந்தது.

விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளவை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இன்று (24ம் தேதி) முதல் ஜன.26ம் தேதி வரை மாலை 6 மணிக்கு தேரடி திருப்பலி, செபஸ்தியார் நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வெனிசுகுமார் தலைமையில் தென்மண்டல இளைஞர் இயக்குநர், தோழமை பங்குதந்தை ஜேசுராஜ், மற்றும் பங்கு மக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: