×

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நக்ரோட்டாவிலிருந்து மீண்டும் தொடங்கியது.! வழியெங்கும் உற்சாக வரவேற்பு

ஜம்மு: ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீர் சிட்னி பைபாஸ் நக்ரோட்டாவிலிருந்து மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம், கடந்த 19ம்  தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது. காஷ்மீரில் சம்பா மாவட்டம் விஜய்பூரில் இருந்து நேற்றைய ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கியது. இரட்டை குண்டுவெடிப்பு காரணமாக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலையோரம் நின்றவர்களுடன் ராகுல்காந்தி கைகுலுக்கினார். பாதயாத்திரை ஜம்முவை அடைந்தது. சிதரா என்ற இடத்தில் நேற்றைய யாத்திரை முடித்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணம் சிட்னி பைபாஸ் நக்ரோட்டாவிலிருந்து மீண்டும் தொடங்கியது. இரட்டை குண்டுவெடிப்பு காரணமாக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையோரம் நின்றவர்களுடன் ராகுல்காந்தி கைகுலுக்கியபடியே சென்றார்.

Tags : Rahul Gandhi ,India Unity Walk ,Nagrota , Rahul Gandhi's India Unity Walk resumes from Nagrota! Enthusiastic welcome all the way
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...