×

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, கவுன்சலிங் மூலம் இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அரசு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் தனியார் பள்ளிகளின் போட்டி காரணமாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்றும், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்களாக என்றும் பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதனால் கூடுதலாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, காலியாக உள்ள பணியிடங்களில் நியமித்து சமப்படுத்தும் வகையில் பணி நிரவல் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை  முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதே குழுமத்தை சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இட மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று இந்த கவுன்சலிங் தொடங்கியது. 25ம் தேதி வரை நடக்கும். பிற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் கவுன்சலிங் நடக்கும்.

Tags : Transfer of Surplus Teachers in Government Aided Schools: Education Department Order
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...