இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு ‘தில்’ இருக்கா? காங்கிரஸ் எம்.பி சவால்

விருதுநகர்: காங்கிரஸ் மூத்த தலைவரான மாணிக்கம் தாகூர் எம்.பி. விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘உண்மையில் அண்ணாமலைக்கு தில் இருந்தால், ஈரோடு கிழக்கு தேர்தலில் நிற்கட்டும். கூட்டணியோடு, எல்லா கட்சிகளையும் கூட்டி வந்து நிற்கட்டும் பார்க்கலாம். விளையாட்டு போக்கில் பிளைட் கதவை திறக்கும் பழக்கம் என, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு விளையாட கூடியவர் அண்ணாமலை. நாடாளுமன்ற புதிய கட்டிடம் பாஜவின் அலுவலகமாக இருக்கக்கூடாது. மக்களின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்க வேண்டும். கட்டுமானத்தை, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து சென்று காட்டவில்லை. பிரதமர் மட்டும் ஒத்தையாக போய் பார்த்து வருகிறார். என்ன மர்மம் இருக்கிறது என தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

Related Stories: