எம்எல்ஏ பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி

வேலூர்: வேலூரில் கலெக்டர், எஸ்பி, அதிகாரிகள் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் மர்ம ஆசாமிகள், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் பெயரில் பேஸ்புக் பக்கத்தில் போலியாக கணக்கு தொடங்கி, அவரது நட்பு வட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மெசஞ்சரில் பணம் கேட்டு தகவல் அனுப்பியுள்ளனர். தகவலறிந்த எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: