10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அம்மா நடிகை

சென்னை: தனது 73வது வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார் அம்மா நடிகை லீனா ஆண்டனி. மலையாளத்தில் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் லீனா ஆண்டனி. பகத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் ஹீரோயின் அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக இவர் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டுதான் தனது 10ம் வகுப்புக்கான தேர்வை எழுதினார். இதில் லீனா தேர்ச்சி பெற்றுள்ளார். 73 வயதில் பத்தாவது தேர்வாகியுள்ள லீனா பற்றிய செய்திகள் வெளியானதும் மலையாள நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி லீனா ஆண்டனி கூறும்போது, ‘சிறு வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து படிக்கவில்லை. நடிக்க வந்துவிட்டேன். வயதான காலத்தில்தான் மலையாள சினிமாவில் பிசியான நடிகை ஆகியிருக்கிறேன். தொடர்ந்து அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறேன். இந்நிலையில் குடும்பத்தார் அளித்த ஊக்கம் காரணமாக பத்தாவது தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இனி பிளஸ் ஒன் படிக்கும் எண்ணமும் இருக்கிறது. இந்த வயதிலும் படித்து ஜெயிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருப்பது பெருமையாக உள்ளது’ என்றார்.

Related Stories: