தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேக மூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: