ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி விவரம் சேகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , தலைமை செயலகத்தில் நேற்று கூறியதாவது: இடைத்தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலைவிட குறைவான செலவுதான் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம், கடந்த முறை கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக கூடுதல் செலவு செய்யப்பட்டது. இருந்தாலும் எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவல் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 1000 பேர் இருந்தால், ஒரு வாக்குச்சாவடி மையம் கடந்த தேர்தலின்போது இருந்தது. தற்போது, கொரோனா பரவல் அதிகளவில் இல்லாததால் 1,500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: