உணவு விற்கும் கடை உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் ஜானி ஜான்கான் சாலையில் உள்ள கே.எம்.எஸ் புட்ஸ் எனும் கடையை அஸ்ரப் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கர் 500 கிராம் அளவு கொண்ட 4 ஓமப்பொடி பாக்கெட்டை பரிசோதனைக்கு மாதிரிக்காக எடுத்து சென்றுள்ளார். அதன், பின்னர் அந்த ஓமப்பொடியில் 100% அளவு இருக்க வேண்டிய செயற்கை வண்ணம் அளிக்கும் கெமிக்கல் 144% என்ற அளவில் இருந்ததாக மிரட்டினார். அதனை, பெரிதுப்படுத்தாமல் இருக்க ரூ.40,000 லஞ்சத்தை பாஸ்கர் மிரட்டி பெற்றுள்ளார். இது குறித்து வாட்ஸ் அப் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து புகாரினை விசாரணை செய்யும்படி உணவு பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார். உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்ட விசாரணையில் பாஸ்கரன் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டதால், துறை ரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டப்பட்டது. அதன்படி லஞ்சம் பெற்றது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: