கும்பகோணம் துர்கையம்மனுக்கு புதிதாக அமைக்கப்பட்ட தங்கரதத்தினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

தஞ்சாவூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (23.01.2023) இந்தாண்டு மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறவுள்ள திருக்கோயில்களில் ஒன்றான தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் சார்பில் விழா நடத்தப்படும் இடங்களை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் நகரில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், அத்திருக்கோயிலின் யானை “மங்களத்திற்கு“ ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியினை பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம், அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு துர்கை அம்மனுக்கு உயதாரரால் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரத்திலான ரதத்தில் செப்பு தகடு வேயப்பட்டு தங்கநீர் தோய்த்த தங்கரதத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன்,

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் மாநகராட்சி மேயர் திரு.சரவணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, இணை ஆணையர்கள் ஆர்.செந்தில் வேலவன், எம்.சுப்பிரமணி, மோகனசுந்தரம், k.ராமு, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர்கள் ஜி.கவிதா, எஸ்.சாந்தா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: