×

கல்வராயன்மலையில் சாராய ரெய்டு: 8,100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர், தும்பராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கச்சிராயபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் கரியாலூர் போலீசார் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது குரும்பாலூர் கிழக்கு ஓடை பகுதியில் ஆலம்பாறை அருகே 7 சின்டெக்ஸ் டேங்க்கில் இருந்த 3,500 லிட்டர் சாராய ஊறலையும், 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் இந்த வழக்கில் குரும்பாலூரை சேர்ந்த மாயவன், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல தும்பராம்பட்டு கிழக்கு காட்டுக்கொட்டாய் கிழக்கு ஓடை பகுதியில் சாராய ரெய்டு நடத்தி தனித்தனியே இரு இடங்களில் இருந்த 4,000 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். நேற்று மட்டும் 8,100 லிட்டர் ஊறலை அழித்துள்ளனர். மேலும் ஊறல் வைத்திருந்த பேரல்களையும் வெட்டி சேதப்படுத்தினர்.

கஞ்சா ரெய்டு நடத்த கோரிக்கைகல்
வராயன்மலையில் காய்ச்சும் சாராயத்தை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளதால், இப்போது அந்த சமூக விரோதிகள் கஞ்சா செடி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்வராயன்மலையில் மறைவான இடங்களில் கஞ்சா செடி வளர்க்கின்றனர். மேலும் கல்வராயன்மலையில் இருந்து கஞ்சா கச்சிராயபாளையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிக்கு இரவில் கடத்தி விற்கின்றனர்.
 
இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த கஞ்சாவால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் வெளிமாவட்டத்தை சேர்ந்த சிறப்பு படை போலீசாரை கொண்டு மலையில் கஞ்சா ரெய்டு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பாக்கின்றனர்.

Tags : Galvarayanmountain , Liquor raid in Kalvarayanmalai: 8,100 liters of liquor destroyed
× RELATED கல்வராயன்மலையில் கனமழை; கொசப்பாடி ஏரி...