×

சென்னை சென்ட்ரலில் பெண் பயணிக்கு இலவச டிக்கெட் தராமல் வாக்குவாதம் செய்த அரசு பஸ் நடத்துனர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை சென்ட்ரலில் பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடத்துநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக 28/A பேருந்தில் பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணசீட்டு வழங்காமல் தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துநர் சிவசுதனை சஸ்பெண்ட் செய்தது மாநகர போக்குவரத்துக்கு கழகம். பொதுமக்களிடம் மரியாதை, கண்ணியம், கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பயணிகளிடம் கவனக்குறைவாக நடக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  போக்குவரத்துக்கு கழக மேலாண் இயக்குநர்.அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Central , Chennai Central, Female Passenger, Free Ticket, Govt Bus Conductor Suspended
× RELATED காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு...