அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறிய மோதலை ஆய்வு செய்தார் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

அருணாச்சலப் பிரதேசம்: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லை பகுதிக்கு சென்ற ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பாதுகாப்பு நிலவரத்தை ஆராய்ந்தார். அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதியான தவாங் செக்டாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்தன. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பு வீரர்களும் லேசான காயமடைத்ததாக தகவல் வெளியானது இதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் சர்ச்சை கூறிய பகுதியில் இருந்து விலகி சென்றனர்.

பின்னர் எல்லையில் அமைதியை நிலை நாட்டும் வகையில் இந்திய,சீன இடையே ராணுவ அதிகாரிகள் நிலையிலான கொடி கூட்டம் நடத்தபட்டது. இந்த சூழலில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே எல்லைக்கு சென்று இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்தும், பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தி வீரர்களை பாராட்டிய ராணுவத்தளபதி இதே பற்றுடனும், வீரத்துடனும் செயல்படுமாறு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

Related Stories: