×

மோடி - அமித் ஷாவின் வியூகம் தோல்வி; பாஜகவின் 3 ‘பி’ டீம்கள் யார்?.. ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

புதுடெல்லி: ஆளும் பாஜகவுக்கு மூன்று ‘பி’ டீம்கள் உள்ளன என்றும், அவை எந்தெந்த கட்சிகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் நடைபயணத்திற்கு, வெளியில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவரது புதிய கட்சியை இன்னும் பதிவு செய்யப்படாததால் வருத்தத்தில் உள்ளார்.

ஆளும் பாஜகவுக்கு மூன்று ‘பி’ டீம்கள் உள்ளன. முதல் அணி அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், இரண்டாவது அணி ஆம் ஆத்மி, மூன்றாவது அணி குலாம் நபி ஆசாத்தின் டிஏபி ஆகியவையாகும். குலாம் நபி ஆசாத்தின் கட்சியின் தொண்டர்களில் பலர் காங்கிரசில் சேர்ந்து விட்டனர். தற்போது அவரது கட்சி சுருங்கிவிட்டது. காங்கிரஸ் வாக்குகளை உடைக்க குலாம் நபி ஆசாத்தை அனுப்பிய மோடி - அமித் ஷாவின் வியூகம் தோல்வியடைந்துள்ளது’ என்றார்.

Tags : Modi ,Amit Shah ,BJP ,Jairam Ramesh , Modi - Amit Shah's strategy failed; Who are the 3 'B' teams of BJP?.. Jairam Ramesh explains
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...