மத்திய பிரதேச பேரவை தேர்தல்: 220 நிர்வாகிகளை நியமித்தது காங்கிரஸ்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ெவளியிட்ட அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்ட காங்கிரஸ்  கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதற்கான  முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, 50 துணைத் தலைவர்கள், 105 பொதுச் செயலாளர்கள் மற்றும் 64 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை முடிவுற்றவுடன், இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: