தாய்லாந்தில் காஸ் சிலிண்டர் கசிவால் 2 குழந்தைகள் உட்பட 11 பயணிகள் தீயில் கருகி பலி

அம்னாட்: தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு மாகாணமான அம்னாட் சாரோனில் இருந்து பாங்காக் நோக்கி 12 பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இவர்கள் சந்திர புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் ஏற்பட்ட தீ விபத்தால், வேன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 11 பயணிகள் தீயில் கருகி பலியாகினர். ஒருவர் மட்டும் வேனின் ஜன்னல் வழியாக குதித்து தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இச்சம்பவம் குறித்து பேரிடர் மீட்புக் குழுவின் தன்னார்வலரான நிகோம் சீன் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான வேனில் டீசல் எரிபொருள் மற்றும் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் காஸ் எரிவாயு கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். சாலையில் சென்று கொண்டிருந்த வேன், எவ்வாறு சாலையில் இருந்து விலகிச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். வேனில் இருந்த 12 ேபரில் 11 பேர் தீயில் கருகி பலியாகினர்’ என்றார்.

Related Stories: