×

பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம்: போராட்டம் நடத்தும் கிராம மக்களுடன் விவசாய சங்க தலைவர் திடீர் ஆலோசனை

காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு கடந்த 180வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஏகனாபுரத்தில் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கிராம மக்களிடம் பேசும்போது, ‘’பரந்தூர் புதிய விமான நிலையம் அமைய இருப்பதாக  இதுவரை எந்த ஒரு அரசாணையும் எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் இருக்கும் நிலையில், பொதுமக்கள் இருக்கும் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழவிடாமல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, உடனடியாக காவல் தடுப்புகளை அகற்றவேண்டும் என்றார்.

Tags : Paranthur ,association ,president , Paranthur new airport issue: Farmers' association president holds impromptu meeting with protesting villagers
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...