இணைந்து செயல்படுவோம்: எடப்பாடி பழனிசாமி அழைப்பு

தேனி: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கும் வகையில், நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தேனியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனி மாவட்டம் கூடலூரில் திருமண நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பேசியதாவது: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கும் வகையில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

அதுவே மறைந்த தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனாக இருக்கும். நம்வழி தனிவழி, நேர்மையான வழி. நம் வழியில் அனைவரும் இணைந்து ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: