சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பணியாற்றும் வகையில் தமாகா தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜி.ேக.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.